திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள பர்வத மலையில் ஆன்மீக தலத்திற்கு மட்டுமல்லாமல் மற்றொரு விஷயத்திற்கும் மிகவும் புகழ் பெற்றது அதுதான் மாவுக்கட்டு கட்டுவது. ஏனென்றால் பருவதமலையில் விளையும் பல்வேறு மூலிகைகள் மக்களுக்கு பல நோய்களை விரட்ட பயன்படுத்தப்படுகிறது.
அதாவது கை, கால் முறிவு, எலும்பு மூட்டு நகர்வு குழந்தை இன்மை இடுப்பு வலி, கை கால் வலி முதுகு வலி மற்றும் பல நோய்களுக்கு பருவதமலையில் மூலிகை மருந்துகளும் மாவுக்கட்டு கட்டப்பட்டு இயற்கை அருமருந்தும் வழங்கப்படுகிறது.
![]() |
பருவதமலை பட்டியந்தலில் மாவு கட்டும் இடங்களில் புகழ் பெற்ற ஒரு இடம் |
பருவதமலையில் கட்டு கட்டும் இடம் எங்கே உள்ளது? என்று நிறைய பேருக்கு தெரியாமல் இருக்கலாம். உண்மையில் தெரியாமல் தான் இருக்கிறார்கள். வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு நிச்சயமாக தெரியாது! ஆதலால் இந்த பதிவில் பர்வத மலையில் மாவு கட்டு கட்டும் இடங்கள் எங்கெங்கே உள்ளது என்பதை தெளிவாக காண்போம்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டத்தை உட்பட்ட தென் மகா தேவமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது சுமார் 4560 அடி உயரம் உடைய பருவதமலை. இந்தப் பருவதமலையைச் சுற்றி சுமார் 27 கிலோமீட்டர் தொலைவில் கிரிவலப் பாதை அமைந்துள்ளது. நமது பர்வதமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ஒரு கிராமம் தான் பட்டியந்தல். இந்த கிராமத்தில்தான் அதிகமாக மாவுக்கட்டும் இயற்கை மூலிகைகளும் கொடுக்கப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து பேருந்துகளில் ஏறி நேரடியாக பர்வதமலை பேருந்து நிறுத்தத்தில் வந்து இறங்கும் மக்கள் அங்கிருந்து பட்டியந்தல் என்று பெயர் சொன்னால் எப்போதும் ஆட்டோகளில் ஏற்றிக்கொண்டு வந்து இறக்கி விடுவார்கள். அப்படி இல்லாமல் தாங்களே பைக்குகளில் கார்களில் வருபவர்கள் பருவதமலை கிரிவலப் பாதையில் பட்டியந்தல் கிராமம் எங்கு உள்ளது என்று கேட்டால் அனைவரும் சொல்வார்கள் அதை கேட்டு கிரிவலப் பாதையிலேயே வந்தால் கட்டுக்கட்டும் இடத்திற்கு வந்து விடலாம்.
திருவிழா நாட்களில் கூட இவ்வளவு கூட்டம் இருக்குமா என்று கூற முடியாது ஆனால் தினந்தோறும் பட்டியந்தல் கட்டும் கட்டும் இடத்தில் கூட்டம் வந்த வண்ணம் தான் இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை கூட விடுமுறை இல்லாமல் தொடர்ந்து மக்களுக்காக வேலை செய்கிறார்கள் கட்டு கட்டும் பெருமக்கள்.
பட்டியந்தல் கிராமத்தில் பத்து பதினைந்து பேருக்கு மேல் மக்களுக்கு மாவுக்கட்டு கட்டுகிறார்கள். பல்வேறு நோய்களுக்கு மருந்து கொடுக்கிறார்கள். ஆனால் மக்கள் இங்கு புகழ்பெற்ற ஒரு இடத்தை நோக்கி மட்டுமே வருகிறார்கள்.
மாவு கட்டு கட்டுவதற்கு மூலிகைகள் பருவதமலையிலிருந்துதான் பறித்து வந்து அரைத்து கட்டுகிறார்கள். மக்கள் கட்டு கட்டுவதற்கு தாங்களே பால் மற்றும் முட்டைகளை எடுத்து வந்து விடுவார்கள். பால் மற்றும் முட்டை கட்டாயமாக கட்டு கட்டுவதற்கு தேவைப்படுகிறது.
ஆதலால் மக்கள் கொடுக்கும் பால் மற்றும் முட்டையை பயன்படுத்தி பர்வத மலையிலிருந்து பறித்து வந்த இலை தழைகளை சேர்த்து அரைத்து எங்கு கட்டு கட்ட வேண்டுமோ அங்கு வைத்து கட்டுவார்கள்.
மக்கள் அனைவரும் இயற்கை வைத்திய முறைக்கு மாறுவது பாராட்டக்கூடியதுதான். இதே நோய்களுக்கு செயற்கை மருந்துகளும் நிறைய இடங்களில் நிறைய மருத்துவமனைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருந்தாலும் அதை எல்லாம் தவிர்த்து விட்டு மக்கள் இயற்கைக்கு திரும்புவது பாராட்டத்தக்கது.
மாவு கட்டு கட்டும் இடங்கள் அனைத்தும் திருவிழா போல் மக்கள் கூட்டங்களால் நிறைந்து வழிகிறது. இதை பயன்படுத்தி பழ வியாபாரம், இயற்கை பொருட்கள் வியாபாரம், போண்டா பஜ்ஜி வியாபாரம் என பல கடைகள் வந்துவிட்டது. அவர்களும் இவர்கள் மூலமாக பயனடைகிறார்கள்.
ஏன் பருவதமலை கிரிவலப் பாதையில் பட்டியந்தல் கிராமத்தில் மட்டும் என்றும் இயற்கை மருத்துவ முறைகள் பயன்படுத்தப்படுகிறது அதை பயன்படுத்தி மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றால் பட்டியலில் கிராமத்திற்கு நேராக பருவத மலையின் பின்புறம் மிகவும் அடர்த்தியான மரங்களும் மூலிகை தாவரங்களும் நிறைந்துள்ளது. ஆதலால் இயற்கை மருந்துகள் தயாரிப்பதற்கு ஏற்ற வண்ணம் பட்டியந்தல் கிராமம் இருக்கிறது.
இங்குள்ள கிராமத்து மக்கள்
காடுகளை அழிக்க மாட்டார்கள். மரங்களை வெட்ட மாட்டார்கள். இதனால் காடு பாதுகாக்கப்படுகிறது. மிகவும் அடர்த்தியாக காணப்படுகிறது.
தற்போது என்னதான் நவீன மருத்துவம் வளர்ந்திருந்தாலும் இன்னமும் இயற்கை மருத்துவத்தை ஈடுகட்டும் வகையில் எந்த மருந்துகளும் வரவில்லை என்பது அப்படியே செயற்கை மருந்துகள் உடனடியாக நோயை குணப்படுத்தினாலும் மீண்டும் மீண்டும் அதே நோய்கள் திரும்ப வந்து கொண்டு தான் இருக்கும். நிரந்தரமாக விட்டு ஒழியாது; ஆனால் இயற்கை மருந்துகள் மெதுவாக தான் நோயை குணப்படுத்தும். ஆனால் ஒரு தடவை நோய் குணமாகிவிட்டால் மீண்டும் அந்த நோய் நம்மை அண்டாது.
ஆதலால் தான் மக்கள் இயற்கை மருத்துவத்திற்கு திரும்புகிறார்கள். ஆனால் அதற்கு ஏற்ப இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்த பெரியவர்கள் யாரும் தற்போது இல்லாத காரணத்தினால் இருக்கும் ஒன்று இரண்டு பெரியவர்கள் மட்டும் தங்களுக்கு தெரிந்த வைத்திய முறைகளை மக்களுக்கு பயன்படுத்தி அவர்களின் நோய்களை குணப்படுத்தி வருகிறார்கள்.. இதேபோல தொடர்ந்து மக்கள் இயற்கை வைத்திய முறைக்கு மாறி பல்வேறு சித்த மருத்துவர்களையும் இயற்கை வைத்தியர்களையும் உருவாக்க வேண்டும். அவர்களை உற்சாகப்படுத்தி மீண்டும் இந்த வேலையை மக்கள் புதுப்பிக்க வேண்டும். அது மக்கள் கையில் தான் இருக்கிறது.
Tags
Paruvathamalai